மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

பிரச்னைகளை எதிர்பார்த்த விஜய்

பிரச்னைகளை எதிர்பார்த்த விஜய்

“மெர்சல் படத்தினால் பிரச்னைகள் வரும் என தெரிந்தே தான் நடித்தேன்” என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி திட்டம் குறித்த வசனங்கள் இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், இந்த சர்ச்சைகள் படத்துக்கான விளம்பரமாக அமைந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நேற்று (ஜனவரி 13) சென்னையில் விகடன் விருது வழங்கும் விழாவில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது, ‘மெர்சல்’ படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு வழங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு இந்த விருதை வழங்கினார். அப்போது பேசிய விஜய், “தமிழர் கலாசாரம் குறித்த ஒரு படத்தில் நடித்து அதற்கு இந்தத் தமிழர் திருநாளில் விருது கிடைத்ததற்கு ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன். மெர்சல் படத்தினால் பிரச்னைகள் வரும் என எனக்கு முன்பே தெரியும். அவசியம் காரணமாகவே மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன். இந்தப் படத்துக்கு எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 14 ஜன 2018