மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக் கோலாகலமாகத் தொடங்கியது!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக் கோலாகலமாகத் தொடங்கியது!

பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 14) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமான விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாகப் பொங்கல் திருநாளுடன் இணைந்த தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பல பகுதிகளில் நடைபெறுகின்றன. அதன்படி, புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கியது. 954 காளைகளுடன் 623 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். காலை 8 மணிக்கு வாடிவாசல் திறக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.

ஜல்லிக்கட்டை முன்னிட்டு 10 மருத்துவக் குழு, 12 கால்நடை மருத்துவக் குழு, 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு தங்க காசுகள், தங்க செயின்கள், கட்டில், பீரோ, சைக்கிள், பாத்திரங்கள் மற்றும் பரிசுகளை வழங்க விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். பாலமேட்டில் நாளையும் (ஜனவரி 15), அலங்காநல்லூரில் ஜனவரி 16ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 14 ஜன 2018