மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

அதிருப்தி நீதிபதியுடன் பார் கவுன்சில்!

அதிருப்தி நீதிபதியுடன் பார் கவுன்சில்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் - தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர ஏழு பேர் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ளது. இந்தக் குழு முதற்கட்டமாக நீதிபதி செல்லமேஸ்வரரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த 12ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மறைமுகமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் அவர்கள், “உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சரியில்லை. இதே நிலைமை நீடித்தால், இந்திய நாட்டில் ஜனநாயகம் இருக்காது” என்றும் குறிப்பிட்டிருந்தனர். தலைமை நீதிபதிக்குத் தாங்கள் எழுதிய விரிவான கடிதத்தையும் வெளியிட்டனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பலத்த விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று (ஜனவரி 13) பிரதமரின் முதன்மை செயலாளர், தலைமை நீதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது விவாதத்தின் சூட்டை இன்னும் அதிகப்படுத்தியது.

இந்த நிலையில் பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தலைமையில் நேற்று பார் கவுன்சிலின் அவசரக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி - நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும்விதமாக ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு, “இந்த பிரச்னையை நாங்கள் ஆரம்பத்திலேயே சரி செய்ய விரும்புகிறோம். அரசியல் தலைவர்கள் யாரும் இந்த விவகாரத்தை அரசியலாக்க முயற்சி செய்ய வேண்டாம். நீதித்துறையின் கண்ணியம் குலைந்துவிடக் கூடாது. நீதித்துறையின் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். இதுபோன்ற விவகாரங்களை பொது அரங்கில் விவாதித்தால் நீதித்துறை, ஜனநாயகம் பலவீனமடையும்” என்று மனன் குமார் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

பார் கவுன்சில் சார்பில் அமைக்கப்பட்ட குழு இன்று (ஜனவரி 14) மாலை 7.30 மணியளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. முதற்கட்டமாக இன்று டெல்லியிலுள்ள நீதிபதி செல்லமேஸ்வரர் இல்லத்தில் அவரைச் சந்தித்த மனன் குமார் மிஸ்ரா உள்பட பார் கவுன்சில் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்ற நீதிபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 14 ஜன 2018