மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: இருவர் கைது!

விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: இருவர் கைது!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்றிரவு (ஜனவரி 13) கைது செய்தனர்.

2017 செப்டம்பர் மாதம் தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் 1,058 காலி பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு நடத்தியது. தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதைவிட, அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பதாகத் தேர்வு எழுதியவர்கள் பலர் குற்றம்சாட்டினர். அதைத் தொடர்ந்து, அனைத்துத் தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள் நகல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அப்போது பலருக்கு நிறைய மதிப்பெண் வித்தியாசம் இருந்தது. தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து தேர்வு எழுதியவர்களில் 196 பேர்மீது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. விடைத்தாள் திருத்தம் செய்தவர்கள், குறுக்குவழியில் வேலையில் சேர முயன்றவர்கள் என மொத்தம் 156 பேர் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேர்வுக்குரிய விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரித்த தனியார் நிறுவனம்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்பட்டது.

தேர்வு முறைகேடு தொடர்பாக கடந்த 28ஆம் தேதி சென்னை முகப்பேரைச் சேர்ந்த கணேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மதிப்பெண்ணை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்த, நொய்டாவைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனத்தில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் ஊழியர் ஷேக் தாவூத் பொன்னேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். முறைகேடு குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மதிப்பெண் முறைகேடுகளுக்கு மூளையாகச் செயல்பட்டதாக ஓய்வுபெற்ற ரயில்வே காவல் துறை டிஎஸ்பி ஒருவரின் மகனான சுரேஷ்குமார் பால் என்பவரையும், ரகுபதி என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்றிரவு சென்னையில் கைது செய்தனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 14 ஜன 2018