மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

தமிழில் வாழ்த்திய மோடி, அமித் ஷா

தமிழில் வாழ்த்திய மோடி, அமித் ஷா

தமிழில் வாழ்த்திய மோடி, அமித் ஷா

பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அறுவடை திருநாளாம் பொங்கல் விழா உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் இன்று (ஜனவரி 14) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் தங்கள் இல்லத்தின் முன்பு பொங்கல் வாழ்த்துக் கோலமிட்டு, புது பானை வைத்து பொங்கலிட்டனர். பொங்கிய பொங்கலைச் சூரியனுக்கு வைத்து வழிபட்டனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு எனது மகிழ்ச்சியான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இந்த வருட பொங்கல் திருவிழா அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 14 ஜன 2018