மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

ரகுலுக்கு விட்டுக்கொடுத்த காஜல்

ரகுலுக்கு விட்டுக்கொடுத்த காஜல்

தனக்கு வந்த வாய்ப்பை ரகுல் ப்ரீத் சிங்குக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார் காஜல்.

2008ஆம் ஆண்டு பேரரசு இயக்கிய பழனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தமிழ்த் திரையுலகில் பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள காஜல், தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிகளவிலான ரசிகர்களைக் கொண்டவர். தற்போது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் காஜலைக் கொண்டாடி வருகின்றனர். அதற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது நானி, நாகார்ஜுனா நடிப்பில் வெளிவரவுள்ள புதிய படத்தில் தனக்கு வந்த வாய்ப்பை ரகுல் ப்ரீத் சிங்குக்குப் பெற்றுத் தந்துள்ள சம்பவம். இந்தப் படத்தை ஸ்ரீராம் ஆதித்யா இயக்குகிறார்.

“நானியுடன் நட்பில் உள்ள காஜலுக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. மற்ற படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் இதில் நடிக்க முடியவில்லை. இதனால் அந்தக் கதாபாத்திரத்துக்கு ரகுல் பொருத்தமாக இருப்பார் என்று கருதியதால் படக்குழுவிடம் பேசி இந்த வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்துள்ளார்” என படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டெக்கான் க்ரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 14 ஜன 2018