மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

ஐஎஸ்டி கட்டணம் குறைப்பு!

ஐஎஸ்டி கட்டணம் குறைப்பு!

உள்வரும் சர்வதேச அழைப்புகளுக்கான (ஐஎஸ்டி) கட்டணத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) குறைத்துள்ளது.

இதுகுறித்து டிராய் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஐஎஸ்டி அழைப்புகளுக்கான கட்டணம் நிமிடத்துக்கு 53 பைசாவிலிருந்து 30 பைசாவாகக் குறைக்கப்படுகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இந்தப் புதிய கட்டணம் நடைமுறைக்கு வருகிறது.

இணையதளத்தின் அதிவேக வளர்ச்சிக்குப் பிறகு ஐஎஸ்டி அழைப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டது. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்டைம் போன்ற செயலிகளின் வளர்ச்சி ஐஎஸ்டி அழைப்புகளைக் குறைத்ததில் பெரும்பங்கு வகிக்கிறது. வெளிநாட்டு அழைப்புகளுக்கு வாய்ஸ்கால் முறையைப் பயன்படுத்துவதை குறைத்து வீடியோகால் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதையடுத்து ஐ.எஸ்.டி. அழைப்புகளை அதிகரிக்கும் வகையில் கட்டணக் குறைப்பு நடவடிக்கையை டிராய் மேற்கொண்டுள்ளது.

2018ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே டிராய் தொடர்ந்து சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கடந்த வாரத்தில், அழைப்புத் துண்டிப்பு மற்றும் சேவைகளின் தரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் கடந்த வாரத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கூட்டம் ஒன்றை டிராய் நடத்தியது.

மேலும், தொலைத்தொடர்புத் துறையில் வயர்லஸ் நெட்வொர்க் சேவையை மேம்படுத்த 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படுகிறது என்று டிராய் ஜனவரி 3ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. இத்திட்டத்தின்படி 20 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வயர்லஸ் இணையச் சேவை அளிக்க உறுதி பூண்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் 5ஜி சேவையைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சியிலும் டிராய் ஈடுபட்டுள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 14 ஜன 2018