மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

களத்தை மாற்றிய பாலா

களத்தை மாற்றிய பாலா

பாலா இயக்கத்தில் முதன்முறையாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜனவரி 13) வெளியானது.

டீசர் வெளிவந்தபோது அதில் ஜோதிகா பேசிய சர்ச்சைக்குரிய வார்த்தை அவர் மேல் வழக்கு தொடுக்கும் அளவுக்குச் சென்றது. இதனால் டீசரில் இடம்பெற்ற அதே காட்சி ட்ரெய்லரிலும் இடம்பெற்றாலும் அதில் வசனம் பயன்படுத்தப்படவில்லை. பாலா கதாநாயகியை மையமாக வைத்து படங்கள் இயக்கவில்லை என்று சொன்னால் அதை இந்தப் படம் மூலம் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கலாம். ட்ரெய்லர் முழுக்க ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரியாக ஜோதிகா மிரட்டுகிறார். “நீ போலீஸா இல்ல புரொபஷனல் ரவுடியாம்மா” என்ற வசனம் அவரைப் பார்த்து கேட்கப்படுகிறது.

குற்றச்செயல்களில் ஈடுபடுபவராக ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். வழக்கமாக தென்மாவட்டத்தை மையமாக வைத்தே படங்களை இயக்கிவரும் பாலா சென்னை போன்ற ஒரு நகரத்தின் குப்பத்து வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்டுள்ளார். டீசரைப் போன்று ட்ரெய்லரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலாவின் பி ஸ்டுடியோஸ், இஒஎன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

ஞாயிறு 14 ஜன 2018