மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

மீண்டும் புனேவை வீழ்த்திய சென்னை!

மீண்டும் புனேவை வீழ்த்திய சென்னை!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்று (ஜனவரி 13) நடைபெற்ற போட்டியில் புனே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி, புனே சிட்டி அணிகள் மோதின. இரண்டு அணிகளும் சம பலம்கொண்ட அணிகள் என்பதால் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது.

இந்த சீசனில் புனேவில் இதற்கு முன்னர் இவ்விரு அணிகளும் மோதின. அந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. எனவே, இரண்டாவது போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்ற ஆர்வம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியின் 83ஆவது நிமிடத்தில் சென்னை அணி வீரர் கிரகோரி நெல்சன் மூன்று வீரர்களுக்கு இடையே சிறப்பாக கோல் அடித்து சென்னை அணியின் வெற்றிக்கு உதவினார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 14 ஜன 2018