மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

ஆடம்பரக் கார் சந்தை: வேகமான வளர்ச்சி!

ஆடம்பரக் கார் சந்தை: வேகமான வளர்ச்சி!

ஆடம்பரக் கார்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா பத்தாண்டுகளில் 21 இடங்கள் முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் 40,000 ஆடம்பரக் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் ஆடம்பரக் கார்கள் விற்பனை பத்தாண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. ஐ.ஹெச்.எஸ். நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “இந்தியாவின் ஆடம்பரக் கார் சந்தை கடந்த பத்தாண்டுகளில் 21 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் இந்தியா ஆடம்பரக் கார் விற்பனை சந்தையில் 27ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2007ஆம் ஆண்டு இந்தியா இந்தப் பட்டியலில் 48ஆவது இடத்தில் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆடம்பரக் கார் மாடல்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் ரூ.25 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையில் ஆடம்பரக் கார்கள் சந்தையில் கிடைக்கின்றன. மெர்சிடஸ் பென்ஸ், பி.எம்.டபுள்யூ., ஆடி, ஜாகுவார், லேண்ட் ரோவர், வால்வோ, போர்ச்சே ஆகிய கார்கள் ஆடம்பரக் கார் விற்பனையில் அசத்தி வருகின்றன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 14 ஜன 2018