மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலம்.காம் வாசகர்களை ஊக்குவிக்கும்விதமாக சென்னைப் புத்தகக் காட்சியில் தினம் ஒரு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கி வருகிறது.

செய்திகளைப் பின்புலத்துடனும் கருத்துச் செறிவுடனும் வழங்கும் நமது மின்னம்பலம், தரம் வாய்ந்த கட்டுரைகளை தினமும் வெளியிட்டு வருகிறது. மின்னம்பலத்தில் வெளிவந்த பல்வேறு கட்டுரைகள் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களாகத் தற்போது வெளிவந்துள்ளது. சென்னைப் புத்தகக் காட்சியில் அரங்கு எண் 379ல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மின்னம்பலப் பதிப்பகப் புத்தகங்களைத் தினமும் ஏராளமான வாசகர்கள் வாங்கிச் செல்கின்றனர். அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை என பல தளங்களில் கருத்துச் செறிவுமிக்க கட்டுரைகளை எதிர்பார்ப்பவர்கள் கட்டாயம்வருவது மின்னம்பலம் அரங்கை நோக்கித்தான்.

ஆர்வமிக்க ஏராளமான நம் மின்னம்பலத்தின் வாசகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டதுதான் ஸ்மார்ட்போன் பரிசு திட்டம். இதன்மூலம் மின்னம்பலம் அரங்குக்கு வருகை தரும் வாசகர்கள் குலுக்கல் முறையில் தினமும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மார்ட்போன் பரிசு பெறுகின்றனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 14 ஜன 2018