மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

போராடி வென்ற ராம்குமார்

போராடி வென்ற ராம்குமார்

ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின் தகுதி போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று (ஜனவரி 13) நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் பிரான்ஸ் வீரர் கிளப் செக்ஹாரவ் உடன் பலபரீட்சை நடத்தினார்.

தொடக்கம் முதலே இரண்டு வீரர்களும் சமபலம் கொண்டு விளையாடியதால் போட்டி மிகுந்த சுவாரஸ்யமாக நடைபெற்றது. முதல் செட்டை ராம்குமார் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது செட்டை அவர் கைப்பற்ற விடாமல் கிளப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6-6 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாவது செட் இருந்தது. அப்போது அதிரடியாக விளையாடிய ராம்குமார் ஒரு புள்ளியைப் பெற்று 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று போட்டியைக் கைப்பற்றினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 14 ஜன 2018