மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

அமலாக்கத் துறை சோதனை: எள்ளி நகையாடும் பிழை!

அமலாக்கத் துறை சோதனை: எள்ளி நகையாடும் பிழை!

டெல்லியிலுள்ள தனது வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை எள்ளி நகையாடத்தக்க பிழை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு நிதித் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்மீது சிபிஐ குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அவரது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு சோதனையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 13) சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் டெல்லியிலுள்ள சிதம்பரத்தின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து, டெல்லியில் நேற்று (ஜனவரி 13) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அமலாக்கத் துறை டெல்லியிலுள்ள தனது ஜோர்பாக் இல்லத்தில் நடத்திய சோதனை என்பது எள்ளி நகையாடத்தக்க பிழையாக உள்ளது. அவர்கள் ஏற்படுத்திய சங்கடத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், “என்னுடைய மகன் கார்த்தி சென்னையில் வசித்து வருகிறார். டெல்லி இல்லத்தில் நான் மட்டுமே வசித்து வருகிறேன் என்று அமலாக்க அதிகாரிகளிடம் சொன்னபோது, காத்திக் சிதம்பரமும் என்னுடைய டெல்லி இல்லத்தில் வசிப்பதாகத் தாங்கள் நம்புவதாகக் கூறி அமலாக்கத் துறையினர் சோதனையை நடத்தினர். ஆனால், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது” என்று சிதம்பரம் கூறினார்.

தனது ஜோர்பாக் இல்லத்தில் சமையலறை மற்றும் குளியலறையில் கூட சோதனை நடத்தினார்கள். ஆனால், அவர்களால் எதையும் கைப்பற்ற இயலவில்லை. சென்னை உட்பட பல பகுதிகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. சோதனை முழுக்க முழுக்க நாடகமே. அமலாக்கத் துறையின் இந்த நாடகத்தை ஏற்கெனவே எதிர்பார்த்தேன் என்று ப.சிதம்பரம் கூறினார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

ஞாயிறு 14 ஜன 2018