மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

திணறும் இந்திய அணி!

திணறும் இந்திய அணி!

இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று (ஜனவரி 13) தொடங்கியது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. நேற்று தொடங்கிய இரண்டாம் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருந்தது. இந்திய அணியில் சாஹா, புவனேஸ்வர் குமார் மற்றும் ஷிகர் தவன் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்குப் பதிலாக பார்த்திவ் படேல், இஷாந்த் ஷர்மா மற்றும் கே.எஸ்.ராகுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடக்க வீரர் டீன் எல்கர் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்கம் மற்றும் ஹாசிம் அம்லா இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். மார்க்கம் 94 ரன்னிலும், அம்லா 82 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிவந்த அம்லா எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஏபி டிவிலியர்ஸ் 20 ரன்கள் மட்டுமே சேர்த்து இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஃப்ரான்ஸ்வா டூ ப்ளஸிஸ் விக்கெட் விழாமல் இருக்க வேண்டும் என்பதால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். ஆனால், மறுமுனையில் களமிறங்கிய குவின்டன் டி காக் மற்றும் பிலாண்டர் இருவரும் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். போட்டியின் தொடக்கம் முதலே போராடி வந்த இந்திய அணிக்கு கடைசி சீசனில் தான் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் கிடைக்கப் பெற்றது. தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களைச் சேர்த்துள்ளது. ஃப்ரான்ஸ்வா டூ ப்ளஸிஸ் (24) மற்றும் கேசவ் மகராஜ் (0) இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்று (ஜனவரி 14) இந்திய அணி மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

ஞாயிறு 14 ஜன 2018