மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

சென்னைக்குக் கிருஷ்ணா நதியிலிருந்து 3.33 டி.எம்.சி. நீர்!

சென்னைக்குக் கிருஷ்ணா நதியிலிருந்து 3.33 டி.எம்.சி. நீர்!

ஆந்திர மாநில அரசு, சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கிருஷ்ணா நதியிலிருந்து 3.33 டி.எம்.சி. தண்ணீரை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. என்டிஆர் தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் இதற்கான ஆணை வழங்கப்பட்டது.

பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளும் சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும் சென்னையின் நீர் ஆதாரங்களான ஏரிகளில் தற்போது நீர்நிலை குறைந்துவருகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கத் தமிழக அரசு முயற்சி எடுத்துவருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு நீர்வளத் துறையின் தலைமை பொறியாளர் கடந்த மாதம் (டிசம்பர்) ஆந்திரா அரசுக்கு, தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்கக்கோரி கடிதம் எழுதினார். வடகிழக்குப் பருவமழையின்போது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சராசரியைவிடக் குறைந்த அளவே மழை பெய்ததால் சென்னை நகருக்குத் தண்ணீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் 46 சதவிகித தண்ணீர் மட்டுமே சேமிப்பில் இருக்கிறது. எனவே, உடனடியாக சென்னையின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய, கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஆந்திர அரசு, கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்தின் பரிந்துரையின்படி, மொத்தம் உள்ள 5 டி.எம்.சி அடி கிருஷ்ணா நதிநீரில் 3.33 டி.எம்.சி. அடி நீர் தமிழக தலைநகருக்கு வழங்க ஒப்புக்கொண்டது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

ஞாயிறு 14 ஜன 2018