மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

இந்து மதத்தைப் பழிப்பதே வாடிக்கை!

இந்து மதத்தைப் பழிப்பதே வாடிக்கை!

‘திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள் இந்து மதத்தைப் பழிப்பதையே தங்களது வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.

திருச்சியில் திராவிடர் கழகம் சார்பாக நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, “திருப்பதி வெங்கடாசலபதிக்கு அவ்வளவு சக்தி இருந்தால், அவர் அருகில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியலுக்குப் பக்கத்தில் ஏன் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் - போலீஸ்காரர்கள் எந்த நேரமும் காவல்காத்துக் கொண்டிருக்க வேண்டும்? பணம் உள்ளோருக்கு முன்னுரிமை, ஏழை, எளிய பக்தர்களுக்கு வெகுநேரம் காத்திருந்த பின்பே ‘தர்ம தரிசனம்’ ஏன்? கடவுள் இப்படி ஏழை, பணக்காரன் என்ற பேத உணர்வோடு நடக்கலாமா?” என்று பேசியிருந்தார்.

இதற்குப் பல்வேறு இந்து அமைப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கனிமொழி கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 13) திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, "திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இந்து மதத்தைப் பழிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதி எவ்வழியோ அவ்வழியே அவருடைய தொண்டர்களும் பின்பற்றுகின்றனர். சேது கால்வாய் திட்டத்தின்போதே ராமபிரானை எந்த என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தார் என்று கருணாநிதி விமர்சனம் செய்தார்” என்று திமுக மீது குற்றம் சாட்டினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 14 ஜன 2018