மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: சம்பா ரவை சர்க்கரைப் பொங்கல்!

கிச்சன் கீர்த்தனா: சம்பா ரவை சர்க்கரைப் பொங்கல்!

“பொங்கல் வந்துடுச்சா? பொங்கல் போயிடுச்சா?” - இந்த இரண்டு வார்த்தைகளும் அன்புகலந்து காதுகளில் நிறைய வந்து சென்று கொண்டேயிருக்கும் நாள்கள் இவைகள். இன்று வெகு சிறப்பாக பொங்கல் திருநாளைக் கொண்டாடிவிட்டு, நாளை மாட்டுப் பொங்கலுக்கும் தயாராகிவிடுவோம். கிராமப்புறங்களில் நாளை மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம்பூசி, குளிப்பாட்டி, அலங்கரித்து நன்றி சொல்வது வழக்கம். நகர்ப்புறங்களில் தெருக்கோலங்களில் மட்டுமே மாடுகளை வண்ணமயமாக காணமுடிகிறது.

ஏர் பூட்டி உழவை செய்தது முன்பெல்லாம் மாடுகள்தான். அவை சேற்றில் உதவினால்தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும். இப்போதெல்லாம் நாற்றுநட ஒரு மெஷின், அறுவடை செய்ய ஒரு மெஷின் என்றாகிவிட்டது. இன்னும் சிலருக்கு அரிசி எப்படி கிடைக்கிறதென்பதே தெரியவில்லை. எது எப்படியோ... உயிரினங்கள் முதல் சக மனிதர்கள் வரை அனைவரிடத்திலும் அன்பு செய்திடுவோம். மகிழ்ச்சியோடு வாழ்ந்திடுவோம். வாழ்த்திடுவோம்.

இனி, சம்பா ரவை சர்க்கரைப் பொங்கல்...

தேவையான பொருள்கள்:

சம்பா ரவை - 200 கிராம்

பயற்றம்பருப்பு - 60 கிராம்

வெல்லம் - 250 கிராம்

நெய் - 1 கரண்டி

முந்திரிப் பருப்பு - 6

ஏலக்காய் - 3

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

சம்பா ரவையையும் பயற்றம்பருப்பையும், ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு வறுத்துக்கொள்ளவும். பிறகு அதை தேவையான அளவு தண்ணீரில் உப்பு கலந்து வேக வைக்கவும். வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், வெந்த ரவை, பருப்புக் கலவையைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய்யைவிட்டுக் கிளறி இறக்கவும்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

ஞாயிறு 14 ஜன 2018