மும்பையில் ஹெலிகாப்டர் விபத்து!


மும்பையிலிருந்து ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் ஏழு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மும்பையின் வடக்கு கடல் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. ஆலைக்கு நேற்று (ஜனவரி 13) காலை 10.20 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுள்ளது. பைலட்டுகள் இரண்டு பேர் மற்றும் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் ஐந்து பேருடன் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், 30 நாட்டிக்கல் மைல் தூரம் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.