மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

குடும்பப் பிரச்னை!

குடும்பப் பிரச்னை!

‘அதிமுக குடும்பப் பிரச்னைகளை வெளியில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மதுசூதனனைவிட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியாக இருந்தும்கூட மதுசூதனனால் வெற்றி பெற முடியவில்லை.

தோல்வியால் மவுனமாக இருந்துவந்த மதுசூதனன், தன்னுடைய தோல்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டு 14 கேள்விகள் அடங்கிய கடிதத்தை பன்னீர், பழனிசாமி இருவருக்கும் எழுதியிருக்கிறார். அதில் ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி தொடர்பாக ஏழு நாள்களுக்குள் அமைச்சர் ஜெயக்குமார், வெங்கடேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து நேற்று (ஜனவரி 13) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “மதுசூதனன் எழுதியுள்ள கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. கடிதத்தில் என்னைப் பற்றி குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. அப்படிக் குறிப்பிட்டிருந்தாலும் அது எங்களுடைய குடும்பப் பிரச்னை. குடும்பப் பிரச்னை குறித்து வெளியில் விவாதிக்க வேண்டிய அவசியம் கிடையாது” என்று பதிலளித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 14 ஜன 2018