மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 ஜன 2018

நெட்வொர்க் சந்தாதாரர் எண்ணிக்கை சரிவு!

நெட்வொர்க் சந்தாதாரர் எண்ணிக்கை சரிவு!

கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் தொலைத் தொடர்புச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.58 கோடி வரையில் குறைந்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017 நவம்பரில் இந்தியாவின் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் 1.58 கோடி குறைந்து, 118.5 கோடியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் 1.20 கோடிப் பேர் தொலைத் தொடர்புச் சேவையைப் பயன்படுத்துபவர்களாக இருந்தனர். அதாவது தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் 1.32 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. சில நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்ததாலேயே இச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியுள்ளதால் அதன் 2.57 கோடி சந்தாதாரர்கள் ரிலையன்ஸிலிருந்து வெளியேறியுள்ளனர்.

தொலைத் தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒருபுறம் குறைந்தாலும், மறுபுறம் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களில் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்து வருவதால் மிகப்பெரிய சரிவு ஏற்படவில்லை. நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் புதிதாக 61 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இதன்மூலம் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 15.2 கோடியாக உயர்ந்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

ஞாயிறு 14 ஜன 2018