மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

பொங்கல் தான் இல்லன்னா போகியும் இல்ல :அப்டேட் குமாரு

பொங்கல் தான் இல்லன்னா போகியும் இல்ல :அப்டேட் குமாரு

தீபாவளிக்கு பட்டாசை கொளுத்தி மெட்ராஸையே தமிழ் சினிமாவுல கனவு டான்ஸ் நடக்குற செட் மாதிரி மாத்துனாங்க நம்ம மக்கள். இன்னைக்கு போகின்னு சொல்லிட்டு கொளுத்தி எடுத்துட்டாங்க. முன்னால மஞ்ச கலர்ல லாரி வருதா இல்லை கொடி பிடிச்சுட்டு வாராங்களான்னே தெரியல. இது போதாதுன்னு ஆண்டாள் மேட்டர்ல டி.நகர்ல இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரைக்கும் வைரமுத்து படத்தை வச்சு கேம்ப் பயர் பண்ணி போராட்டம் நடத்துறாங்க. என்னைக்கு இந்த ஆட்சி காலியாகுதோ அன்னைக்கு தான் போகி கொண்டாடனும்னு பார்க்குறேன். அதுக்கு ஒரு வழியை காட்டமாட்டிக்காங்களேப்பா.

@manipmp

இந்தியாவின் 100 வது செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப் பட்டு விண்ணில் நிலை நிறுத்தப் பட்டது !

தம்பி..இன்னும் போர்வெலுக்கு மூடி போடல

@Kozhiyaar

அறுவை சிகிச்சை நிபுணர் என நம்பி, போஸ்ட் மார்ட்டம் செய்யும் மருத்துவரிடம் கொடுத்து வைத்துள்ளீர்கள், இந்தியாவை!!!

@Ashok R

அம்பேத்கரிசத்தை தாக்க வேண்டுமென்றால் அறிவு வேண்டும். அம்பேத்கர் சிலையைத் தாக்க கல் போதும். பாவம் அறிவுக்கு அவர்கள் எங்கே போவார்கள்? அதனால் கல்லை எடுத்திருக்கிறார்கள்.

@DAnandaRaj

ஆபிஸ்ல சிஸ்டம் சரியில்லைனு மேனஜர்கிட்ட சொன்னேன்.

நீ ரஜினி ரசிகரானு கேக்குறாரு.

@Kannan_Twitz

போலியாக கிடைக்கும் அரவணைப்பினை விட,

யதார்த்தமாக விழும் செருப்படிகளே சிறந்தவை.

‘யதார்த்தம் எப்போதும் வலிக்கும்’

@amuduarattai

தண்ணீரில் இருக்கும் சத்துக்களையெல்லாம், RO system ஆல் பிரித்து விட்டு, பிறகு சத்துக் குறைபாடு என்று சொல்லி, சத்து மாத்திரைகள் சாப்பிடுகிறோம்.

@Kannan_Twitz

தேவையில்லாத பொருளை தீயில் போட்டுத்தான் போகி கொண்டாடனும்னு இல்ல,

காயிலாங்கடையில் போட்டும் கொண்டாடலாம்.

@வாசுகி பாஸ்கர்

மாடர்ன் உடைக்கு நெருடலாய் இருக்கும் தாலியை கழட்டி தன் விருப்பம், தன் வசதி என பழமையை உதறும் சிலர், எந்த நெருடலும் இல்லாமல் அதனினும் பழமையான சாதியை, மாடர்ன் சமூகத்திலும் போகுமிடமெல்லாம் சுமந்து செல்கிறார்கள்.

@vickytalkz

சாலையோரம் பெட்டிக்கடை வைப்பதற்கு ஆதார் அவசியம்-உயர்நீதிமன்றம்

சாலையோரம் சிறுநீர் கழிக்க ஆதார் அவசியம்ன்னு சொல்லிட்டா நாடு சுத்தமாயிடும்

@senthilcp

`ஒன்பது வயதிலேயே பெரியார் முன்பு பேசியவள் நான்!' - வளர்மதி

ஓஹோ,அவர் என்ன பதில் சொன்னாரு?

அவர்"பாட்டுக்கு மேடைல மைக்ல பேசிட்டு இருந்தாரு,நான் என் பாட்டுக்கு அப்பா கிட்டே பேசிட்டு இருந்தேன்.அந்த தைரியத்தைப்பாராட்டிதான் இப்ப விருது வருது

@Thaadikkaran

கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்னு சொன்ன EPS க்கு விருது இல்லைனு நினைக்கும்போது மனதிற்குள் தீக்குளிப்பு நடக்கிறது.

@Rajan Kurai Krishnan

யாராவது உணர்ச்சி வசப்பட்டு நம்ம சிஸ்டம் ரிப்பேர்காரரிடம் வைரமுத்து இழிவு படுத்தபட்டது குறித்து கருத்து கேட்டு விடாதீர்கள். தலை சுற்றி கீழே விழுந்து விடுவார். அதை விட ஆபத்து ஆண்டவரிடம் கேட்பது. நாம் அனைவரும் தலை சுற்றி கீழே விழ நேரலாம்.

@amuduarattai

விவாகரத்து ஆன குடும்பத்தில் மட்டுமல்ல, கணவன்,மனைவி வேலைக்கு போகும் குடும்பத்திலும்,சின்னப் பிள்ளைகளை யார் கூட்டிச் செல்வது என்ற பிரச்சனை உள்ளது.

@BoopatyMurugesh

ஹலோ SETCயா? மதுரைக்கு போகனும் பஸ்ல எதாவது சீட் காலியா இருக்கா?

- டிரைவர் சீட் காலியா தான் இருக்கு வரீயா?

@கருப்பு கருணா

இன்னமும் மிச்சமிருப்பது

போலீசும் ராணுவமும்தான்.அவர்களும் கொடி தூக்கிவிட்டால் ஒன்று புரட்சி..அல்லது எமர்ஜென்சி..

@வாசுகி பாஸ்கர்

இந்து மதம் உள்ளிட்ட எந்த மதத்தின் தனிப்பட்ட நம்பிக்கைகளை விமர்சனம் செய்வதில் திமுக விற்கு உடன்பாடு இல்லை - ஸ்டாலின்

உங்களுக்கு இல்லைன்னு சொல்லுங்க, அதென்ன திமுக

@sThivagaran

ஒருவரை ஒருவர் முந்திச்செல்லும் அவசரம்தான் வாழ்க்கையில் எவரையும் நகர முடியாமல் வைத்திருக்கிறது!

@manipmp

தமிழனாய் இருந்தால் சாப்பிட்ட பின் இலையை எடுக்கவும்

இப்படியும் வரலாம் ஹோட்டலில்

@aselviku

கவிஞர் வைரமுத்துவை மிரட்டலாம், ஊறு விளைவிக்கலாம் என கனவு கூட காண வேண்டாம் -வைகோ

//குருநாதா நீ வந்துட்டியா குருநாதா.. இனி ஆண்டவனாலும் வைரமுத்துவை காப்பத்த முடியாதே.

@CreativeTwitz

முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

// பொங்கலுக்கு வீட்ட சுத்தம் பண்ண வந்துட்டாங்க போல

-லாக் ஆஃப்

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 13 ஜன 2018