மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

தலைமை நீதிபதி பங்களாவில் பிரதமரின் செயலாளர்!

தலைமை நீதிபதி பங்களாவில் பிரதமரின் செயலாளர்!

இந்திய நீதித் துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நேற்று நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சேர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான முக்கியமான குற்றச்சாட்டுகளைப் பத்திரிகையாளர் சந்திப்பில் முன்வைத்தனர். உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் ஒழுங்கில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள், இது குறித்துத் தலைமை நீதிபதிக்கு தாங்கள் எழுதிய விரிவான கடிதத்தையும் வெளியிட்டனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 13) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பங்களாவுக்கு பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா நேரில் சென்றிருப்பது இந்தச் சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.

இன்று காலை டெல்லியிலுள்ள 5, கிருஷ்ணமேனன் மார்க் என்ற முகவரியில் இருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பங்களாவுக்கு பிரதமரின் முதன்மை செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா சென்றார்.

இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் ட்விட்டரில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா, “பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவர் பிரதமரின் தூதுவராகவே செயல்பட்டிருக்க முடியும். எனவே இது குறித்துப் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கோரியிருக்கிறார்.

பாஜக ஆட்சி அமைந்த தேதியிலிருந்து பிரதமரின் செயலாளராக இருக்கும் நிருபேந்திர மிஸ்ரா மோடிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இன்று காலை தலைமை நீதிபதி பங்களா வாசலில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் காரில் இருப்பது போன்ற படம் செய்தி ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியதும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

நேற்று தலைமை நீதிபதி மீது புகார் சொன்ன நீதிபதி செல்லமேஸ்வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா சந்தித்துப் பேசியதற்கு பாஜக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் இன்றோ பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான அதிகாரி இப்பிரச்னையின் இன்னொரு முனையான தலைமை நீதிபதியின் பங்களா தேடிச் சென்றிருப்பது சர்ச்சையை இன்னும் விரிவாக்கியுள்ளது.

இது தனது தனிப்பட்ட வருகை என்றும், தலைமை நீதிபதியைத் தன்னால் சந்திக்க முடியவில்லை என்றும் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்ததாகச் சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 13 ஜன 2018