மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

தேவதைபோல் அலங்கரித்து, ஆடையணிந்து இன்றைய போகி திருநாளை மகிழ்வுடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். “இந்த பசங்க தொல்ல தாங்கல” என்பதும், “குழந்தைங்கன்னா அப்படித்தான் இருக்கும்... விடு” என்பதுமான வார்த்தைகள் வந்து சென்றுகொண்டிருக்கிறது இரண்டு நாள்களாக.

குழந்தைகளுக்குப் பிடித்தவை, ஊரிலிருந்து வந்தவர்களுக்கு விருப்பமானது என ஏகபோகத்துக்கும் செய்துகொடுத்து மகிழ்ந்துகொண்டு இருக்கிற வேளை இது.

அதேநேரத்தில் பற்களிலும் சற்று கவனமாக இருங்கள். பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவதில் வல்லாரை கீரையும் உதவுகிறது. வல்லாரைக் கீரையை பற்களின் மேல் வைத்து தேய்த்து வந்தால், மஞ்சள் கறை நீங்குவதோடு பற்கள் வெண்மையாகப் பளீரிடும். கீரை வாங்கும்போது வல்லாரையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

ஃபேசியல் செய்ய நேரமில்லை. வெளியில் சென்றாலும் மற்றவற்றை செய்யவே நேரம் சரியாக இருந்தது என்று அலுத்துக்கொள்ளும் தோழிகளே...

முகம் பளபளக்க நன்றாக, பழுத்த நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம். பொலிவாக திகழலாம்.

வீட்டுக்கு வந்தவர்களுக்கு தேமல் இருந்தாலோ அல்லது உங்களுக்கே இருந்தாலோ உடனடியாக நீக்க இதோ ஒரு ஐடியா...

கை, மார்பு, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருந்தால், மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் குளித்துவர உடலின் நிறம் மாறும். அழகு மேம்படும்.

நாளைக்காக வாங்கி வைத்த கரும்பை இன்றே ஒரு கை பார்க்காவிடில் தலைவெடித்துவிடும். இருந்தாலும் கரும்பைக் கடித்து சுவைப்பதில் அலாதி சுகம், சுவை. பற்காரைகள் நீங்கும். இடுக்குகளிலுள்ளவையெல்லாம் சுத்தப்படும். பற்கள் உறுதியாகும். ஆனால், சக்கையை மட்டும் விட்டுவைப்பானேன். அதையும் அழகுக்கே பயன்படுத்தலாம். பனிக்காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பு நீங்க கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவிவர உதடு வெடிப்பு குணமாகும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 13 ஜன 2018