மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

1,686 போலீசாருக்கு முதல்வர் பதக்கம்!

1,686 போலீசாருக்கு முதல்வர் பதக்கம்!

பொங்கல் திருநாளையொட்டி 1,686 காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் 1500 பணியாளர்களுக்கு, தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண்கள்) 60 பேர்களுக்கும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

பதக்கங்கள் பெறுபவர்களுக்கு மாதாந்தர பதக்கப் படி அவர்களின் நிலைகளுக்கு ஏற்ப 2018 வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் காவல் துறை இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை இயக்குநர், மற்றும் சிறைத் துறைத் தலைவர்களால் மாவட்டத் தலைநகரங்களில், பின்னர் நடைபெறும் அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும்.

மேலும் காவல் வானொலிப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய்ப் படைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், காவல் புகைப்படக் கலைஞர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் வீதம் மொத்தம் 6 அதிகாரிகளுக்குத் தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்பச் சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கப்படுகிறது.

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்கத் தொகையாகக் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலையில் ரூ.4 ஆயிரமும் சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூ.6 ஆயிரமும் காவல் துணைக் கண்காணிப்பாளர் நிலையில் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

இதற்காக நடைபெறும் சிறப்பு விழாவில் மேற்படி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, முதலமைச்சரால் பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 13 ஜன 2018