மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

விலையை உயர்த்திய மாருதி சுசுகி!

விலையை உயர்த்திய மாருதி சுசுகி!

மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை ரூ.1,700 முதல் ரூ.17,000 வரையில் உயர்த்தியுள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை ரூ.1,700 முதல் ரூ.17,000 வரையில் உயர்த்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ரூ.22,000 வரை விலை உயர்த்தப்பட்டிருந்தது. நிர்வாகம் மற்றும் விநியோகச் செலவு அதிகரித்துள்ளதும் கார்களின் விலை உயர்த்தப்பட்டதற்குக் காரணம் என்று மாருதி சுசுகி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி டெல்லியில், ஆல்டோ 800 மாடல் காரின் விலை ரூ.2.46 லட்சம் முதல் ரூ.3.76 லட்சம் வரையிலும், ஓம்னி ரூ.2.64 லட்சம் முதல் ரூ.2.97 லட்சம் வரையிலும், ஆல்டோ கே.10 ரூ.3.26 லட்சம் முதல் ரூ.4.15 லட்சம் வரையிலும், வேகன்-ஆர் ரூ.4.10 லட்சம் முதல் ரூ.5.34 லட்சம் வரையிலும், செலிரியோ ரூ.4.16 லட்சம் முதல் ரூ.5.34 லட்சம் வரையிலும், செலிரியோ எக்ஸ் ரூ.4.57 லட்சம் முதல் ரூ.5.42 லட்சம் வரையிலும், ஈக்கோ ரூ.3.24 லட்சம் முதல் ரூ.4.32 லட்சம் வரையிலும், விற்பனை செய்யப்படுகிறது.

சுவிஃப்ட் ரூ.4.80 லட்சம் முதல் ரூ.7.46லட்சம் வரையிலும், டிசையர் ரூ.5.43 லட்சம் முதல் ரூ.9.39 லட்சம் வரையிலும், எர்டிகா ரூ.6.24 லட்சம் முதல் ரூ.10.59 லட்சம் வரையிலும், ஜிப்சி ரூ.5.70 லட்சம் முதல் ரூ.6.36 லட்சம் வரையிலும், பிரீசா ரூ.7.24 லட்சம் முதல் ரூ.9.69 லட்சம் வரையிலும், இக்னிஸ் ரூ.4.56 லட்சம் முதல் ரூ.8.08 லட்சம் வரையிலும், பலேனோ & பலேனோ ஆர்.எஸ் ரூ.5.26 லட்சம் முதல் ரூ.8.42 லட்சம் வரையிலும், சியாஸ் & சியாஸ் எஸ் ரூ.7.76 லட்சம் முதல் ரூ.11.55 லட்சம் வரையிலும், எஸ்-கிராஸ் ரூ.8.49 லட்சம் முதல் ரூ.11.29 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 13 ஜன 2018