மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

முதலமைச்சர் தீர்த்த யாத்திரை திட்டம்!

முதலமைச்சர் தீர்த்த யாத்திரை திட்டம்!

டெல்லியில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டெல்லி அரசு இலவச ஆன்மீக சுற்றுலா வசதி அளிக்க உள்ளது. ரூபாய் 3 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கு "முதலமைச்சர் தீர்த்த யாத்திரை திட்டம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. டெல்லியின் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் இருந்தும் ஆண்டுக்கு 1,100 பேர் இந்த ஆன்மிகச் சுற்றுலாவிற்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட உதவியாளர் ஒருவருடன் 3 நாட்களுக்குச் சுற்றுலா சென்றுவருவதற்கான தொகை இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

முதலமைச்சர் தீர்த்த யாத்திரை திட்டத்தில் 5 வழித்தடங்களில் சுற்றுலா செல்ல முடியும். இந்த 5 வழித்தடங்களில் ஒன்றைப் பயனாளிகள் தேர்வு செய்யலாம். முதலாவதாக மதுரா, பிருந்தாவன், ஆக்ரா, ஃபத்தேபூர்சிக்ரி இடங்களுக்கும், இரண்டாவதாக ஹரித்துவார், ரிஷிகேஷ், நீல்கண்ட் ஆகிய இடங்களுக்கும் சென்று வரலாம். மூன்றாவதாக அஜ்மீர், புஷ்கர் சென்று வரவும், நான்காவதாக அமிர்தசரஸ், வாகா எல்லை, அனந்த்பூர் சாஹிப் செல்லவும், ஐந்தாவதாக வைஷ்ணவதேவி கோயில், ஜம்மு செல்லவும் அனுமதிக்கப்பட உள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 13 ஜன 2018