மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

எடப்பாடி கோரிக்கை: நிராகரித்த சித்தராமையா

எடப்பாடி கோரிக்கை: நிராகரித்த சித்தராமையா

டெல்டா பயிர்களின் பாசனத்திற்காக 15 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டுமெனக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். ஆனால் தண்ணீர் திறக்க முடியாது என்று சித்தராமையா நிராகரித்துவிட்டார்.

கடந்த 2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் தந்த இறுதித் தீர்ப்பில், கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு வருடத்திற்கு 192 டிஎம்சி நீரை முறை வைத்து வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த 9ஆம் தேதி வரை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 111.647டிஎம்சி நீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு இன்று (ஜனவரி 13) எழுதியுள்ள கடிதத்தில், "மேட்டூர் அணையில் நேற்றைய ( ஜனவரி 12) கணக்கின்படி 21.27 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த நீரானது பயிர் பாசனத்திற்கும், கோடைக் காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் குடிநீர்த் தேவைக்கும் போதுமானதாக இருக்காது.

ஆனால் கர்நாடகாவில் ஏற்கனவே சாகுபடி பருவம் முடிந்துவிட்டது. மேலும் மாநிலத்திலுள்ள நான்கு அணைகளிலும் 49.82 டிஎம்சி வரை தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே தமிழகத்தில் டெல்டாவில் விளைந்து நிற்கும் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைக்காகவும் 15 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டெல்டா பகுதி பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு 15 நாட்களுக்குள் 7 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கடிதத்தில் கர்நாடக முதல்வருக்குப் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 13 ஜன 2018