மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

ப.சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு!

ப.சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு!

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

ஐ.என்.எஸ். மீடியாவுக்கு நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோதனையும் நடத்தப்பட்டது. மேலும், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்து ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வரும் 16ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இன்று ( ஜனவரி 13) காலை 7.30 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த ஆரம்பித்தனர். 5பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்தச் சோதனையை நடத்தியது. இதேபோல டெல்லியிலுள்ள சிதம்பரத்தின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. இந்தச் சமயத்தில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரும் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விளக்கமளித்த கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன்,"காலை 7.30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் வந்து சோதனை நடத்தினர். இதற்கான உத்தரவை அமலாக்கத்துறை கூடுதல் இயக்குனர் பிறப்பித்திருப்பதாக ஆவணங்களைக் காட்டினர்.இதில் எந்த ஆவணத்தையும் அவர்கள் கைப்பற்றவில்லை. அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் சார்பில் அவரது அங்கீகாரம் பெற்றவர் ஆஜரானார். எனவே ஆஜர் ஆகவில்லை என்பது தவறான தகவல்" என்று குறிப்பிட்டுளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 13 ஜன 2018