அதிகரிக்கும் விளம்பரச் செலவுகள்!

2018ஆம் ஆண்டில் இந்தியாவின் விளம்பரச் செலவுகள் 12.5 சதவிகிதம் உயரும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, விளம்பரங்களுக்காகச் செலவிடும் தொகை குறித்து லண்டனைச் சேர்ந்த டேண்ட்சு ஏஜிஸ் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘2016ஆம் ஆண்டில் விளம்பரங்களுக்காக இந்தியா செலவிட்ட தொகை 9.6 சதவிகிதம் உயர்ந்திருந்தது. இந்நிலையில் நடப்பு 2018ஆம் ஆண்டில் விளம்பரங்களுக்கு 12.5 சதவிகிதம் கூடுதலாக இந்தியா செலவிடும். சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்கங்கள் சீராகி வருவதாலும், அரசின் நிதிக் கொள்கைகள் சிறப்பாக இருப்பதாலும் இந்த ஆண்டில் விளம்பரச் செலவுகள் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். டிஜிட்டல் ஊடக விளம்பரச் செலவுகள் இந்த ஆண்டில் 30 சதவிகிதமும், மொபைல் விளம்பரச் செலவுகள் 43.6 சதவிகிதமும் கூடுதலான அளவில் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.