சந்திக்க வேண்டியிருக்கும் சவால்கள்!


ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கு கூட்டத்தில் சிறப்புரை ஆற்றவுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
ஹார்வர்டு பல்கலையில் இந்தியக் கருத்தரங்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 15ஆவது ஆண்டு கருத்தரங்கு வரும் பிப்ரவரி 10, 11ஆம் தேதிகளில் நடக்கிறது. இந்தக் கருத்தரங்கில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்தக் கருத்தரங்கில் இந்தியாவின் வளர்ச்சி, சந்திக்க வேண்டியிருக்கும் சவால்கள் குறித்து அவர்கள் உரையாற்றுகின்றனர். தவிர, கருத்தரங்கில் பங்கேற்கும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்க இருக்கின்றனர். கருத்தரங்கில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில், தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ், பாஜக எம்.பி. பூனம் மகாஜன், நடிகை மற்றும் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் ரம்யா உள்ளிட்டோரும் பேசுகின்றனர்.