மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

டாப் ஆர்டர்: சவாலான தென்னாப்பிரிக்கா!

டாப் ஆர்டர்: சவாலான தென்னாப்பிரிக்கா!

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத காரணம் குறித்து கருத்துக் கணிப்பின் முடிவினை ESPN நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டாம் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று (ஜனவரி 13) தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிவர விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு இந்திய அணி மீது வைக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி மட்டுமின்றி அனைத்து நாட்டு வீரர்களுக்கும் தென்னாப்பிரிக்க மைதானம் கடும் சவாலாக இருந்துவருகிறது என்பது இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவருகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடத்தப்பட்டு ESPN வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி தென்னாப்பிரிக்காவில் எல்லா அணிகளையும் சேர்ந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எடுக்கும் சராசரி ரன்களை அட்டவணைப்படுத்தியுள்ளது.

அதில் 25.29 என்ற குறைந்த ஆவரேஜ் உடன் தென்னாப்பிரிக்க அணி கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்காவில் 210 சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 7 சதங்களை மட்டுமே அடித்துள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமின்றி தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கும் தென்னாப்பிரிக்கக் களங்கள் சவாலாகவே உள்ளன.

இன்று தொடங்கவிருக்கும் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் நிலைத்து நின்று விளையாடி தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடிஏற்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 13 ஜன 2018