சர்வதேச உணவு விலை உயர்வு!

2017ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை 8.2 சதவிகிதம் உயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் ஆய்வறிக்கை கூறுகிறது.
இதுபற்றி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2014ஆம் ஆண்டுக்குப் பிறகு உணவுப் பொருட்களுக்கான விலைக் குறியீடு அதிகபட்சமாக 2017ஆம் ஆண்டில் 174.6 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. மேலும், உணவுப் பொருட்களின் விலை 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 8.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் உணவுப் பொருட்களுக்கான விலைக் குறியீடு 169.8 புள்ளிகளாக இருந்தது. இது நவம்பர் மாத விலைக் குறியீட்டை விட 3.3 சதவிகிதம் அதிகமாகும்.