மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

பொங்கல்: தொண்டர்களைச் சந்திக்கும் கருணாநிதி

பொங்கல்: தொண்டர்களைச் சந்திக்கும் கருணாநிதி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஓராண்டு காலமாக வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். சில மாதங்களாக முன்பு கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா கண்காட்சியை காண பவள விழா அரங்குக்கு வருகை தந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தும், வாழ்த்து பெற்றும் வருகின்றனர்.

2ஜி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கருணாநிதியிடம் ஆசிபெற்ற கனிமொழி, நாம் ஜெயித்துவிட்டோம் என்று கூறினார். அதற்கு கருணாநிதி நாம ஜெயிச்சிட்டோமா என்று மகிழ்ச்சியுடன் திரும்பக் கூறினார். மேலும் பேராசிரியர் எங்கே எனவும் கேட்டார். தன் கண் கண்ணாடியையும் தானே சரிசெய்தார். இந்தக் காட்சிகள் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. அப்போதே கோபாலபுரம் இல்ல வாசலில் தொண்டர்களையும் சந்தித்தார்.

வருடந்தோறும் பொங்கல் தினத்தன்று கருணாநிதி தொண்டர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பொங்கலன்று அவர் கொடுக்கும் 10 ரூபாய் பணத்தை திமுக முன்னணி தலைவர்கள் உள்பட அனைவரும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருப்பர். இந்நிலையில் நாளை கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதையடுத்து கோபாலபுரம் இல்லம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியை சந்திக்கும் யாரும் பூங்கொத்து கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 13 ஜன 2018