கங்கனாவின் புதிய சொகுசு பங்களா!


பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் 30 கோடி ரூபாய் செலவில் புதிய பங்களா ஒன்றை கட்டியிருக்கிறார்.
தமிழில் “தாம் தூம்” திரைப்படத்தில் நடித்த கங்கனா தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 2013ம் ஆண்டு வெளியான குயின் திரைப்படம் அவரது நட்சத்திர அந்தஸ்தை பல மடங்கு உயர்த்தியதன் மூலம் இவருடைய சம்பளம் ஐந்து கோடிகளை தாண்டி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கங்கனா ரணாவத் 30 கோடி ரூபாய் செலவில் புதிய பங்களா ஒன்றை கட்டியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் கங்கணா, தனது சொந்த ஊரான இமாச்சலபிரதேசத்தில் உள்ள மணாலியில் இந்த சொகுசு பங்களாவை கட்டியுள்ளார். பங்களா கட்டியுள்ள இடத்தினை 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ள கங்கனா 20 கோடி ரூபாய் செலவில் வீட்டை கட்டியுள்ளார்.