மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

போகி : திணறிய சென்னை!

போகி : திணறிய சென்னை!

போகிப் பண்டிகையின் காரணமாக எழுந்த புகை மண்டலத்தால் சென்னை மக்களின் காலைப் பொழுது நெருக்கடி மிகுந்ததாக மாறியது.

தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 13) போகி கொண்டாடப்பட்டுவருகிறது. ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்னும் கோட்பாடுதான் போகிப் பண்டிகை. தேவையற்ற, பழைய பொருள்களை இன்று எரிப்பது வழக்கம். மனதிலும் சமூகத்திலும் படிந்து கிடக்கும் காலத்துக்கு ஒவ்வாத நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் துறந்து நம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது இந்தச் செயலின் உட்பொருள்.

தமிழகம் முழுவதும் மார்கழி மாதத்தின் இறுதி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் பழைய பொருட்களையும்,தேவையற்ற பொருட்களையும் எரித்து போகியைக் கொண்டாடினர். பிளாஸ்டிக் பொருட்களை எரித்து காற்றை மாசுபடுத்த வேண்டாம் என அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஆனால், சிலர் டயர் ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்ததால், கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. புகை மூட்டத்தால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் சேவையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. காலை 8 மணி வரை கார்கள் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 50 மீட்டர் வரை எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாததால், வாகனங்களில் உள்ள முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றனர். புகை மூட்டத்தால், மக்களுக்கு இருமல், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டது.

சென்னையில் விமான நிலையத்தில் ஓடுபாதையே தெரியாத அளவுக்குப் புகை மூட்டம் சூழ்ந்ததால், காலை 3 மணிமுதல் விமான சேவை நிறுத்தப்பட்டன. சென்னைக்கு வந்த 12 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 30 விமானங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டன.

போகிப் புகை காரணமாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு ஆண்டு போகிப் பண்டிகையின்போது காற்றில் உள்ள மாசு அதற்கு முந்தைய ஆண்டைவிட 7% குறைந்திருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 13 ஜன 2018