மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

வைரமுத்துவுக்கு வைகோ ஆதரவு!

வைரமுத்துவுக்கு வைகோ ஆதரவு!

ஆண்டாள் சர்ச்சை இன்னும் ஓயவில்லை. கவிஞர் வைரமுத்துவின் ஆண்டாள் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் பாஜகவினரும் பிராமணர் சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜகவின் ஹெச்.ராஜா ஒரு பொது மேடையில் வைரமுத்துவை மிகத் தனிப்பட்ட முறையில் மோசமான வார்த்தைகளால் வசைபாடித் தாக்குதல் நடத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் இன்று தனது ஆதரவை வைரமுத்துவுக்குத் தெரிவித்திருக்கிறார்.

“நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்குக் காலத்தால் அழியாத காவியங்களைத் தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து. தேனினும் இனிய பாடல்களைக் கலைத் துறைக்குத் தந்தார். அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப் போர் புதினங்கள் தமிழ்க் குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறி முறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாகச் சித்தரித்தவையாகும். அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாகச் செந்தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அவர் ஆற்றிவருகிற இலக்கியப் பணி நன்றிக்குரியதாகும். வைரமுத்து தனி மனிதரல்ல; தமிழர்களின் சொத்து’’ என்று வைரமுத்துவைப் புகழ்ந்துள்ள வைகோ,

“விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்து குறித்து அச்செந்தமிழ்க் கவிஞன் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியப் பணியாற்றிவரும் நாளேடும் வருத்தம் தெரிவித்துள்ளது. அவரது கருத்தை விமர்சிப்பது, அது தவறு எனக் கூறுவது ஒவ்வொருவர் உரிமையாகும்.

ஆனால், கவிஞர் வைரமுத்துவைக் கொடூரமான சொற்களால் இழிவுபடுத்தி மிரட்ட முயல்வதும் உயிருக்கே உலை வைப்போம் என்று கூச்சலிடுவதும், நாளேட்டை அச்சுறுத்துவதும் மிகவும் கண்டனத்திற்குரியவையாகும்.தென்பாண்டி மண்டலத்தின் தீரமிகு கவிஞரை மிரட்டலாம் என்றோ அவருக்கு ஊறு விளைவிக் கலாம் என்றோ எவரும் கனவுகூடக் காண வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 13 ஜன 2018