பருத்தி ஏற்றுமதி ஒப்பந்தங்கள் ரத்து!


இந்தியாவில் பருத்தி விலை அதிகரித்துள்ளதால் இந்திய பருத்தி வர்த்தகர்கள் 5 லட்சம் மூட்டைகள் அளவிலான பருத்தி ஏற்றுமதி ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளனர்.
இதுகுறித்து இந்தியப் பருத்தி ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் அதுல் கனத்ரா ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "உள்ளூரில் பருத்தி விலை அதிகரித்துள்ளதால் 5 லட்சம் மூட்டைகள் (பேல்கள்) பருத்தி ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம். (ஒரு பேல் - 170 கிலோ). 2017-18ஆம் ஆண்டில் பருத்திக்கான சந்தைப்படுத்துதல் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. அப்போது பருத்தி வரவு மதிப்பீட்டை விட மிகவும் குறைவாக இருந்தது. நாட்டின் முக்கியமான பருத்தி உற்பத்திப் பகுதிகளில் பிங்க் போல்வார்ம் பூச்சித் தாக்குதலால் தான் பருத்தி உற்பத்தி தொடக்கத்தில் குறைந்திருந்தது. தற்போது வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.