வீடு விற்பனையில் சரிவைக் கண்ட 2017


இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் வீடு விற்பனை 7 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. முந்தைய நான்காண்டுகளின் வீடு விற்பனை அளவைவிட 2017ஆம் ஆண்டு அதிக சரிவைச் சந்தித்துள்ளது.
2017ஆம் ஆண்டில் மொத்தம் 2,28,072 வீடுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பணமதிப்பழிப்பின் தாக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றின் காரணமாக வீடு விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பணமதிப்பழிப்பால்தான் வீடு விற்பனையில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டதாக நைட் ஃபிரான்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான சிஷிர் பைஜால் கூறுகிறார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 3,68,568 வீடுகள் வரை ஓர் ஆண்டில் விற்பனையான நிலையில் 2017ஆம் ஆண்டில் 7 சதவிகித சரிவுடன் 2.28 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனையாகியிருப்பதால் வீடு விற்பனைத் துறையினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.