மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 ஜன 2018

மதுரைக்குச் செல்ல 45 ஆயிரம் ரூபாயா?

மதுரைக்குச்  செல்ல 45 ஆயிரம் ரூபாயா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ரயில்கள் மட்டுமல்லாது விமானங்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் வசதி படைத்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல விமானங்களையே தேர்வு செய்வர். சில விமான நிறுவனங்கள் பல வாரங்களுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்களுக்கு வழக்கமான கட்டணத்தை வசூலிக்கும். நாள்கள் குறைய குறைய முன்பதிவு கட்டணமும் அதிகரிக்கும்.

அந்த வகையில் இன்று (ஜனவரி 13) சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்ல விமானக் கட்டணம் ரூ.7,411 முதல் ரூ.45,605 வரை நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்வதற்கு மட்டுமே. அதேபோல் தூத்துக்குடிக்கான விமானப் பயணத்துக்குக் கட்டணம் ரூ.14,051 ஆக உயர்ந்தது. திருச்சிக்கு விமானக் கட்டணம் ரூ.14,866 ஆக அதிகரித்துள்ளது.

இது பாங்காக், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானக் கட்டணத்தைவிட கூடுதலாகும். இன்று சென்னையில் இருந்து மலேசியா செல்ல விமானக் கட்டணம் ரூ.13,684 (குறைந்தபட்சம்) எனவும், பாங்காக் செல்ல ரூ.4,108 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் முன்பதிவு செய்ததால் இந்தக் கட்டண உயர்வு நடைபெற்றுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 13 ஜன 2018