மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

நீதித் துறையில் நெருக்கடி : நீதிபதி ஹரிபரந்தாமன்

நீதித் துறையில் நெருக்கடி : நீதிபதி ஹரிபரந்தாமன்

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நால்வர் தலைமை நீதிபதிக்கு எதிராகக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது, நீதித் துறையில் உள்ள நெருக்கடியை வெளிக்காட்டுவதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கொகோய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகிய நால்வரும் இன்று மதியம் செல்லமேஸ்வரர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். நீதிபதிகள் செய்தியாளர்களுக்குப் பேட்டி தருவது என்பது இந்திய நீதித் துறை வரலாற்றில் இதுவரை நிகழாத ஒன்று என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. செய்தியாளரிடம் பேசும்போது, “உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நாங்கள் 4 பேரும் நீதித் துறையில் இருக்கும் பிரச்னைகள் குறித்த கடிதத்தை சில மாதங்களுக்கு முன்பே தலைமை நீதிபதிக்கு அனுப்பினோம். நீதித்துறையில் இருக்கும் குளறுபடிகள் குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை என்பதால் மக்களிடம் தெரிவிக்க விரும்பினோம். நீதித் துறையைச் சரிசெய்யாவிட்டால் நாட்டில் ஜனநாயகம் சீர்கெட்டுவிடும்” என்று தெரிவித்தனர். அவர்களது இந்தப் பேட்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.

இதற்கு முன்னர், முன்னாள் நீதிபதி கர்ணன் உட்படப் பலர் நீதித்துறை மீது விமர்சனத்தை வைத்துள்ளபோதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தலைமை நீதிபதி மீதும் நீதித்துறை மீதும் விமர்சனம் வைத்துள்ளது என்பது அதன் நம்பத்தன்மை மீதான சந்தேகத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.

இந்நிலையில் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமனிடம் பேசினோம்.

நீதிபதிகளின் இந்தக் குற்றச்சாட்டை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

குற்றச்சாட்டை முன்வைத்துள்ள 4 பேரும் முக்கியமான மூத்த நீதிபதிகள். இந்த விவகாரம் குறித்து ஒரே வார்த்தையில் பதிலளிக்க வேண்டுமென்றால், இது நீதித் துறையில் நெருக்கடி இருப்பதைத் தெளிவாக்கியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டும்.

நீதிபதி கர்ணன் வைத்த குற்றச்சாட்டும் இந்தக் குற்றச்சாட்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதா?

கர்ணன் குற்றச்சாட்டையும் இதையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது. அது வேறு விதமான நெருக்கடி, இது வேறு விதமான நெருக்கடி. உயர் நீதிமன்ற நீதிபதியை அவதூறு வழக்கில் சிறையில் அடைப்பது என்பது நெருக்கடிதான். மருத்துவக் கல்லூரிக்கு சலுகையாக உத்தரவை பெற்றுதர உதவுவதாக ஒரிசாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி கூறியதாக அவர் மீது எஃப்ஐஆர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி செல்லமேஸ்வர் பிறப்பித்த உத்தரவை அடுத்த நாளே தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ரத்து செய்தார் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

இந்தக் குற்றச்சாட்டை இப்போது வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வெள்ளி 12 ஜன 2018