பிட்காயினுக்குப் போட்டியாக ஜியோ காயின்!


கிரிப்டோ கரன்ஸி எனப்படும் ரகசிய நாணயங்களை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிட்காயின்களில் முதலீடு செய்வது தொடர்பான செய்திகள் சமீபமாகவே இணையதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. இந்தியாவின் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி கிரிப்டோ கரன்ஸியையும் விட்டுவைக்கவில்லை. முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் தலைமையில் 50 தொழில்நுட்பவியலாளர்கள் கொண்ட குழு இந்த ரகசிய நாணயத் திட்டத்தைச் செயல்படுத்தும் பணியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிட்காயினைப் போல பிளாக் செயின் எனப்படும் தொழில்நுட்பத்தை அடக்கிய வகையில் ‘ஜியோ காயின்’ என்ற பெயரில் இந்த ரகசிய நாணயம் வெளியாகவுள்ளது.