மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

ஓவியாவின் அன்புள்ளம்!

ஓவியாவின் அன்புள்ளம்!

மாற்றுத் திறனாளிகளுடன் இணைந்து பொங்கல் கொண்டாடி இருக்கிறார் ஓவியா.

களவாணி படத்தின் மூலம் நடிகையாக பரவலாக அறியப்பட்டாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே அனைத்து தரப்பினராலும் அறியப்பட்ட முகமானார் ஓவியா. ஓவியா ஆர்மி என்று ஒரு அமைப்பு உருவாகும் அளவுக்குப் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலே வெளியேறினாலும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தாலும் தேர்வு செய்து நடித்து வரும் ஓவியா, தன்னை தமிழ் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த விஜய் தொலைக்காட்சியின் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ‘அழகிய ஓவியா’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளோடு இணைந்து பொங்கல் கொண்டாடி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி பொங்கல் தின சிறப்பு காட்சியாக வரும் ஜனவரி 14ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கிறார் ஓவியா. அந்த ப்ரொமோ வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 12 ஜன 2018