மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

மருத்துவர்கள் முற்றுகை போராட்டம்!

மருத்துவர்கள் முற்றுகை போராட்டம்!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் 'டீன்' அலுவலகத்தை முற்றுகையிட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அரும்பாக்கத்தை சேர்ந்த அரவிந்தராஜ் பயிற்சி மருத்துவராகப் பணி புரிந்தார். ஆனால் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறார். இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு தன்னுடன் படித்த மருத்துவர் ஒருவரைப் பார்க்க நேற்று(ஜனவரி 11) மதியம் அரவிந்தராஜ் வந்திருந்தார். அப்போது மருத்துவமனை ‘டீன்’ பொன்னம்பலம் நமசிவாயம் ரோந்து வந்தார்.

மருத்துவர் அரவிந்தராஜ் நடத்தையில் சந்தேகம் அடைந்த டீன் விசாரித்து, அவரை மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த விவகாரம் ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்குத் தெரியவந்தது. பின்னர், சக மருத்துவரை ‘டீன்’ அவமதித்ததாகக் கூறி 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ‘டீன்’ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வெள்ளி 12 ஜன 2018