மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் ஓபிஎஸ்!

ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் ஓபிஎஸ்!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிச்சாமி துணைமுதல்வர் பன்னீர்செல்வம் இன்று(ஜனவரி 12) மரியாதை செலுத்தினர்.

இந்த ஆண்டிற்கான சட்டப்பேரவைகூட்டத்தொடர் கடந்த 8 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி இன்று (ஜனவரி 12) முடிவடைந்துள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது பல்வேறு கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சனை ஓகி புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் நடவடிக்கைள் முதன்மையாக விவாதிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு குறித்த மாசோதா உள்ளிட்ட பல மாசோதக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் செங்கோட்டையன், மாஃபா.பாண்டியராஜன்,ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டின், முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவுக்கு நன்றி செலுத்தும் விதமாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தப்பட்டது என்று ஆளுங்கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்தாநாள் வருகிற ஜனவரி 17 அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 12 ஜன 2018