விஸ்வாசம்னா என்னன்னு தெரியுமா? -அப்டேட் குமாரு


உளுத்தம் பருப்பு இல்லைன்னு சொன்னப்பகூட இவ்வளவு கோவம் வரல சார். வளர்மதிக்கு பெரியார் விருதான்னு நினைக்கும்போது துக்கம் தொண்டைய அடைக்குது. மண் சோறு சாப்பிடுதல், பால் குடம் எடுத்தல் போன்ற அருமையான செயல்களை செய்ததற்கு இந்த விருது குடுத்தாங்களான்னு பார்த்தால், அந்தம்மா மேல கட்சி எம்.எல்.ஏ யாரோ செம்ம காண்டுல இருந்திருக்காங்க. இதுதான் சரியான நேரம்னு யோசிச்சு, பெரியார் விருது அறிவிச்சு அந்தம்மாவை சிக்க வெச்சிருக்காங்க. கட்சிக்காரங்களையும் சந்தோசப்படுத்தணும், கட்சி ஓனரையும் சந்தோசப்படுத்தணும்னு யோசிச்சு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சிருக்கார் முதல்வர். ஆனா, விஸ்வாசத்துல கர்ணனையே மிஞ்சிட்டீங்க சார். கர்ணன்னா, உச்சநீதிமன்றம் மேல குத்தம் சொல்லி ஜெயிலுக்கு போனாரே அவரை சொல்லல. அவர் சொன்னதுதான் உண்மைன்னு இப்ப 4 பேர் தனியா வந்து சொல்லியிருக்காங்களே. நான் பழைய கர்ணனை சொன்னேன். பஸ் வேற கிடைக்குமான்னு தெரியல. அப்டேட்டை படிச்சிக்கிட்டே ஊருக்கு பொடிநடையா போய் சேர்ந்துடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.
@HAJAMYDEENNKS
தலைமை சரியாக இருந்தால் தலைமைநீதிபதியும் சரியாக இருந்திருப்பார்...!
@ArunkumarTNR
ஒரு நாட்டின் உச்சநீதிமன்றத்தில் தவறுகள் நடக்கிறது என்றால் அந்த நாட்டு மக்களுக்கு அங்கு வழங்கப்படும் தீர்ப்பு எவ்வாராக இருக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
@CreativeTwitz
பெட்ரோல் அடிச்சத்துக்கு அப்புறம் ஆயில் அடிக்கும் போது கூட டெங்கு ஒழிப்பு மருந்தையும் tankல ஊத்தி விட்டா, ஊருல இருக்கிற எல்லா கொசுவையும் ஒழிச்சிடலாம்
எவனுக்கும் விவரம் பத்தல, ஏ சுகாதார துறையே
@Kozhiyaar
உச்ச நீதிமன்ற நீதிபதிகளே சிஸ்டம் சரியில்லை என்பது இந்திய குடிமக்களுக்கான எச்சரிக்கை மணியாகவே தோன்றுகிறது!!!
@indirajithguru
என்ன குழந்தை வேண்டும் என்ற ஆணின் ஆசையெல்லாம், பெண் பிரசவ அறையின் உள்ளே போகும் வரையில்தான்..!
@nithyad06253793
ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கமுடியாது..! செல்லூர் ராஜூ உறுதி
ஏன் தலைவரே அதுக்கு பதிலா பாதம் பிஸ்தான்னு போட போறிங்களா
@mahajournalist
உங்களுக்கு வந்த ரத்தம்.. போக்குவரத்து பணியாளர்களுக்கு வந்த தக்காளி சட்னி.
@Rajamohammed
“திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து பேரவை நிகழ்வில் பங்கேற்க ஆசைப்படுகிறேன்” -துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்
அவர் வந்தா நீங்க வெளிநடப்பு செய்யவேண்டிவரும் பரவால்லயா?
@BakkarSiddiq
காய்ஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்; அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா....'''!
@ajmalnks
உச்சநீதிமன்றமும் உச்சத்தில்தான் இருக்கிறது கோஷ்டிபூசலில்.
@Kozhiyaar
நீதிமன்ற நீதிபதிகளையும் விட்டு வைக்கவில்லை போலும் இந்திய அரசின் சர்வாதிகாரம்!!
@CreativeTwitz
என்ஜினீயர்களுக்கு திருமண ஆசைகாட்டி ரூ.1 கோடி சுருட்டிய கோவை இளம்பெண்
அவனுவளுக்கு தான் வேலையே இருக்காதே அப்புறம் எப்டி ஒரு கோடி இருந்துச்சாம்
@taraoffcl
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய பிரச்சனை தீரும்வரை, திமுக எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை - ஸ்டாலின்
போடுற மீம்ஸ்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா
@navnetha
ஒரு இளநி வாங்கி ரெண்டுபேரு குடிக்கிறத பார்த்திருக்கேன். ஒரு டீ
வாங்கி ஒன் பை டூ குடிக்கிறத பார்த்திருக்கேன். ஆனா ஒரு லாலிபாப்பை ரெண்டு பேரெல்லாம்.....
ரொம்ப ஓவர்டா.
ஆளு இல்லாதவன் பாவமெல்லாம் உங்களை
சும்மா விடாதுடா...
@ArunkumarTNR
தமிழகத்தில் மணல் அளவு குறைவாக உள்ளதால் எம் சாண்ட் மணலை மக்கள் பயன்படுத்த தயாராக வேண்டும் - முதல்வர் வேண்டுகோள்.
மணல் அளவு குறைவாக ஆனதற்கு காரணம் மணல் மாஃபியா கும்பல். அந்த கும்பலில் நீங்களும் ஒருவர் என்று நினைவில் கொள்ளுங்கள் முதல்வரே.
@imparattai
நமக்கு தேவைப்படும்போது கிடைக்காதது,
காலம்கடந்து கிடைத்தால் அதற்கான மதிப்பு குறைவானதாகும்,
அது பணமோ பாசமோ உதவியோ எதுவாயிருந்தாலும் சரி.
@fazzz_7
இந்த உலகம் நாம சொல்லுற
உண்மைய விட மத்தவங்க
நம்மள பத்தி சொல்லுற
பொய்யதா முழுசா நம்பும்
ஆய்வு சொல்லுது!
@amyarun
இந்தியா 100 "செயற்கை"கோள் வெற்றிகரமாக ஏவி சாதனை பண்ணிருச்சு வாழ்த்துக்கள்
இந்தியா என்று தன்னிறைவு"இயற்கை"வளர்ச்சியில் முழுமை அடைகிறதோ அன்றே முழுமையான வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள்
@devil_girlpriya
நிருபர் : என்ன சார்! நீங்க எடுத்த சிரிப்பு படத்தப் பார்த்திட்டு ரசிகர்களாம் அழுதுட்டு வராங்களாமே?
டைரக்டர் : டி.வி சீரியல்ல நடிச்ச நடிகர், நடிகைகளா வைச்சு சிரிப்புப் படம் எடுத்தது தப்பாபோச்சு!
@anbu_vimal
திருப்பதிக்கு தன்னை பார்க்க வருபவரை தன்னை போல் பணக்காரராக அனுப்புகிறாரோ இல்லையோ
ஆனா, பழனிக்கு வர எல்லாத்தையும் பாரபட்சமே இல்லாம ஆண்டியாக்கி விடுறாப்ல நம்மாளு
@Selvatwitz
விலைவாசி உயர்ந்துவிட்டதால் உளுத்தம் பருப்பு வழங்க முடியாது- செல்லூர் ராஜு
வருமானமும் போதவில்லை மக்களுக்கு அப்படியே ஒயின்ஷாப் பையும் இழுத்து மூடிவிடலாமே
Masithurai M
உச்சநீதி மன்ற நிர்வாகம் சரியில்லை... உச்சநீதி மன்ற நீதிபதிகள்
அங்கயும் சிஸ்டம் கெட்டுபோயிடுச்சா சார்,
Nahubar Ali
தீபாவளியை விட பொங்கலைத்தான் தமிழன் விரும்பி கொண்டாடுவான்,ஏன்னா பொங்கலுக்குத்தான் தொடர்ந்து 5நாள் லீவ் வருது ...ஹிஹிஹி
@thirumarant
பெரியாருக்கு வளர்மதி விருது குடுக்கலையேன்னு சந்தோஷப்படுங்கடா அப்ரசண்டிகளா...
Thalapathy Bharani
நீதித்துறை குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை :- உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேட்டி
நீதிபதி வேலை புடிக்கலைன்னா வேற வேலைக்கு செல்லலாம் என்றப்படி சென்றார் அந்த பேருந்து ஓட்டுனர்
Karthick Papilio Yehoshuah Muhammed
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது..!
தமிழ்நாடே வேணாம்ன்னு பேசாம லெட்டர் எழுதி வச்சிட்டு எங்கிட்டாவது கண் காணாத இடத்துக்கு போய்ரலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்
Ashok R
கன்னடத்தில் சமஸ்கிருதம் கலந்திருக்கிறது.
தெலுங்கில் சமஸ்கிருதம் கலந்திருக்கிறது.
மலையாளத்தில் சமஸ்கிருதம் கலந்திருக்கிறது.
1950களில் தமிழில் எக்கச்சக்கமாக சமஸ்கிருதம் கலந்திருந்தது. அந்தக்கால பத்திரங்களையோ, பத்திரிக்கைகளையோ படித்தால், படங்களைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.
ஆனால் இன்று தமிழில் சமஸ்கிருதம் இல்லை. வணக்கம்தான் உள்ளது நமஸ்காரம் இல்லை. ஏனெனில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் இருக்கிறது. இது உள்ளங்கை நெல்லிக்கனி செய்தி. ஒன்னு புரிஞ்சுகிடணும் ஒன்னு புரிஞ்சுகிடணும்னு ஒன்னுமே புரியாம பேசிட்டு அலையிற ஒன்னு இதை புரிஞ்சுகிடணும்.
Nanjil Aravintha
2017 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது திருமதி. பா. வளர்மதி அவர்களுக்கு....
பங்க கலாய்.... எடப்பாடிதான்யா பக்கா காவி....
Nahubar Ali
2017ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிப்பு
மண்சோறு வளர்மதிக்கு பெரியார் விருதா? நாடு தாங்காது.
Sankar Ganesh
: சாதிய எப்டிம்மா ஒழிப்ப?
: நேரா போயி கைல இருக்குற சாதி சான்றிதழை கிழிச்சிட்டு ஓடியாந்துருவேன்.
சொன்னது யாருன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.
@drezhilan
பெரியார் விருது - பா.வளர்மதி
●பெரியார் விருது கொடுத்தது போலையும் ஆச்சு!
●கட்சிகாரருக்கு விருது கொடுத்தது போலையும் ஆச்சு!
●பெரியாரை கேவலப்படுத்தியது போலையும் ஆச்சு!
★ஒரே கல்லுல திராவிடர், அதிமுக,பிஜேபி மூணு பேரையும் கூல் பண்ணியது போலையும் ஆச்சு!
■ எடப்பாடியார் ஒரு ராஜதந்திரி!