மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

ஜிஎஸ்டி: எலெக்ட்ரிக் வாகன வரி குறையுமா?

ஜிஎஸ்டி: எலெக்ட்ரிக் வாகன வரி குறையுமா?

அடுத்த வாரம் நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள், பயோ டீசல் பேருந்துகள் மற்றும் விவசாய மோட்டார் பம்புகளின் வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நோக்குடன் ஜனவரி 18ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சில பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில் அதற்கு முந்தைய கடைசிக் கூட்டம் என்பதால் ஜிஎஸ்டி தொடர்பான நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு காணுவதற்கான வாய்ப்பாக இக்கூட்டம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஜிஎஸ்டி வாயிலான வருவாய் இன்னும் மேம்படாமல் இருப்பதால் 28 சதவிகித வரி வரம்பில் உள்ள பெரும்பாலான பொருட்களுக்கான வரி குறைக்கப்படாது என்று ஜிஎஸ்டி கவுன்சில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இக்கூட்டத்தில் நீர்ப்பாசனத் திட்டத்துக்கான மோட்டார் பம்ப் உள்ளிட்ட உபகரணங்களுக்கான வரி தற்போதுள்ள 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகவும், பயோ டீசல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகவும் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் (பிப்ரவரி 1) இது என்பதால், இந்த பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் சிறு நிறுவனங்கள் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முன்பான இந்த கவுன்சில் கூட்டத்திலும் விவசாயத் துறை மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் (வரிக் குறைப்பு) இருக்கும் என்று கூறப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 12 ஜன 2018