மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

ரேஷர் நிறுவனத்தின் புதிய முயற்சி!

ரேஷர் நிறுவனத்தின் புதிய முயற்சி!

கேம் தயாரிப்பு நிறுவனமான ரேஷர் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் CES நிகழ்ச்சியில் புதுமையான தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்து பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

லாஸ் வேகஸ் நகரில் நடைபெற்றுவரும் CES நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள் தங்களின் புதுமையான படைப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளனர். அதில் ரேஷர் நிறுவனம் அறிமுகம் செய்த ப்ராஜெக்ட் லின்டா அதிக பயனர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரேஷர் நிறுவனம் கேம் தயாரிப்பில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட்போன் கேமர்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 8GB RAM மற்றும் 4000mAH பேட்டரி சக்தி கொண்டு இந்த மாடல் வெளியாகியதால் கேமர்ஸ் இந்த மாடலை அதிகம் விரும்பினர். 8GB RAM என்பதால் பெரும்பாலான கிராபிக்ஸ் பயன்பாடுகளைக் கொண்டு இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை சிறு கணினி போலவே பயன்படுத்த முடியும்.

ஆனால் இதன் திரையளவு 5.7 இன்ச் மட்டுமே இருந்ததால் பெரும்பாலும் கணினி பயன்பாடுகள் இதில் பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் பயனர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதனைச் சரி செய்வதற்காக இந்தப் புதிய லின்டா என்ற கருவியை ரேஷர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. லேப்டாப் போல் உள்ள இந்தக் கருவியில் மவுஸ் பேட் இருக்கும் இடத்தில் இந்த ரேஷர் ஸ்மார்ட் போனைப் பொருத்திக்கொண்டு, அதன் திரையில் மொபைலில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். இந்த வசதி மூலம் ஆன்ட்ராய்டு பயன்பாடுகளை எந்தத் தடையுமின்றி அந்த லேப்டாப்பில் பயன்படுத்தலாம். இதற்கு முன்னர் திரையை கணினியுடன் இணைத்துக் கொள்ளும் வசதியை மட்டும் பல நிறுவனங்கள் வழங்கியுள்ளனர். ஆனால் இந்தப் புதிய முயற்சி பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் புதிய மாடலின் வெளியீடு மற்றும் விலை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 12 ஜன 2018