மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

விரைவில் புதிய தலைவர்!

விரைவில் புதிய தலைவர்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் கடந்த ஓராண்டுக்கு மேலாகப் பதவி வகித்து வருகிறார். கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றதைத் தொடர்ந்து, கட்சியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்ட்டது. குறிப்பாக மாநிலத் தலைவர்களை மாற்றிவிட்டு புதியவர்கள் அப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் கடந்த 7ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஜனார்த்தன திவேதி வெளியிட்ட அறிக்கையில், "அமைப்புத் தேர்தல் நடைபெறும் வரை அந்தந்த மாநிலத் தலைவர்கள் , தங்கள் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவரின் பதவியில் திருநாவுக்கரசர் தொடர்ந்து நீடித்துவருகிறார்.

இந்த சூழ்நிலையில் இன்று ( ஜனவரி 12) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,"தை பிறந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம். கிரீடத்தில் மலர் கிரீடம், முள் கிரீடம் என்று பலவகை உண்டு, அதனை சுமப்பவர்கள்தான் வித்தியாசப்படுவார்கள்" என்று புதிர்வைத்துப் பேசினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 12 ஜன 2018