மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

செயற்கைக்கோள்களில் சதம் அடித்த இஸ்ரோ!

செயற்கைக்கோள்களில் சதம் அடித்த இஸ்ரோ!

இந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (ஜனவரி 12) காலை 9.29 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு போன்ற பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டில் இந்தியா-3, அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து, கொரியா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் 28 என்று மொத்தம் 31 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.

இந்தியாவின் 100ஆவது மற்றும் 2018ஆம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான, 28 மணிநேர கவுன்ட் - டவுன் நேற்று காலை 5:29 மணிக்குத் தொடங்கியது.

கார்டோசாட் 2, 7ஆவது செயற்கைக்கோள். 710 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியின் இயற்கை வளங்களைப் படமெடுத்து அனுப்பும் வகையில் தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப்பட்ட 2 மணிநேரம் 21 நிமிடத்தில் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 505 கி.மீ உயரத்தில் புவியின் வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.

“இது ஒரு சிறந்த பணி. கார்டோசாட்டின் செயல்திறன் இதுவரை திருப்திகரமாகவே உள்ளது” என ஒய்வு பெற்ற இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார். புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள கே.சிவனுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

‘‘இஸ்ரோ விஞ்ஞானிகளின் நீண்ட கால உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. எதிர்பார்த்தபடி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன” என்று இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.சிவன் கூறினார். இதற்காகப் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.

1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, தனது முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்தியது. ரஷ்ய நாட்டிலிருந்து இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. அதன் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 19 ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 12 ஜன 2018