பினாமி சொத்து: வருமான வரித்துறை பறிமுதல்!

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.3,500 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகளை வருமான வரித் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வருமான வரித் துறையினர் தீவிர முயற்சியுடன் கருப்புப் பணத்தைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் வீட்டுமனை, கடைகள், நகை, வாகனம் உள்ளிட்ட சுமார் ரூ.3,500 கோடி மதிப்பிலான 900 சொத்துகளை ஜனவரி 11ஆம் தேதி வருமான வரித் துறையினர் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இதில் அசையாச் சொத்துகளின் மதிப்பு மட்டும் ரூ.2,900 கோடிக்கு மேல் இருக்கும். பினாமி பரிவர்த்தனைகள் தொடர்பான ஐந்து வழக்குகளில் ரூ.150 கோடிக்கும் மேலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.